தேடுதல்

பெரும்புயல்  காற்றுக்குப்பின் பெரும்புயல் காற்றுக்குப்பின் 

இனியது இயற்கை – உயிர் தரும் காற்றுக்கு உயிரில்லையா

காற்றின் துணை கொண்டு கடல்கடந்த மனிதன், பின்னர், வாகன சக்கரங்களில் காற்றடித்து அதன் துணைகொண்டு சாலைகளைக் கடந்தான்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நாமனைவரும் காற்றைச் சுவாசிக்கிறோம். ஆனால், அந்தக் காற்றை நம்மால் கண்ணால் பார்க்கவோ, மூக்கால் நுகரவோ, நாக்கால் சுவைக்கவோ முடிவதில்லை. இருப்பினும் அது, மரங்களையும் கட்டிடங்களையும் தகர்க்கவல்ல சக்தியுடன் உள்ளது.

படகுகளை நீர்நிலைகளில் செலுத்துவதற்கு அவற்றின் மீது பாய்மரங்களைக் கட்டும் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. காற்றின் துணை கொண்டு கடல்கடந்த மனிதன், பின்னர், வாகன சக்கரங்களில் காற்றடித்து அதன் துணைகொண்டு சாலைகளைக் கடந்தான். இடம்விட்டு இடம்பெயர்வதற்கான எளிய வழிகளைக் கண்டறிய முயன்றபோது, காற்றுதான் அவனுக்கு முக்கியக்கூறாக இருந்துள்ளது. பாய்மரப்படகிலும், வாகனத்திலும் காற்று ஒரு சக்தியாகவும், பாதுகாப்புக் கவசமாகவும் செயல்படுகிறது. 

பறவைகள் தங்கள் சிறகுகளை அசைத்துக் காற்றில் பறக்கின்றன. அவை மிதந்துச் செல்லவும், கீழே விழாமல் இருக்கவும், காற்றுதானே உதவுகிறது.

உயிரினங்கள் வாழும் உலகம் இந்தப் பூமி மட்டும்தான் என்று நம்பப்படுகிறது. இங்கு இலவசமாகக் கிடைக்கும் காற்றை நாம் மாசுபடுத்திவருவதால், நாளைய தலைமுறையின் வாழ்வு குறித்த அச்சம் நல்மனதுடையோர் அனைவருக்கும் உள்ளது.

சுத்தமானக் காற்றைச் சுவாசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இணைந்து இயற்கையை பாதுகாப்போம், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2022, 12:46