தேடுதல்

புயலால் சாய்ந்த மரங்கள் புயலால் சாய்ந்த மரங்கள் 

இனியது இயற்கை – நீலம் மற்றும் வர்தா புயல்

சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் இருந்த பழமையான மரங்களை வேரோடு சாய்த்த, 2016ஆம் ஆண்டின் வர்தா புயல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2012-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31-ம் தேதி புயலாக மாறியது, நீலம் என பெயரிடப்பட்ட புயல். இது மணிக்கு ஏறக்குறைய 83 கிலோமீட்டர் வேகத்தில் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்தது. இந்த புயலால், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர், ஏறக்குறைய 450 மின் கம்பங்கள் புயலினால் சாய்ந்தன.

வர்தா புயல்

2016ஆம் ஆண்டு முதலில் உருவான கியான்ட், நடா ஆகிய புயல்களால் எந்த பாதிப்பும் இல்லை. பிறகு அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் வர்தா புயலாக மாறி மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்னையை உலுக்கிவிட்டு சென்றது. சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் இருந்த பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயலால் ஏற்பட்ட சேதம் 1000 கோடியாக கணக்கிடப்பட்டது. 24 மணி நேரம் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2022, 12:24