தேடுதல்

இலையுதிர்காலத்தில்  மரங்கள் இலையுதிர்காலத்தில் மரங்கள் 

இனியது இயற்கை - பருவக் காற்றுகள்

இந்தியாவின் பருவக் காற்றுகள் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வடகிழக்கு பருவக் காற்று ஆகும். இந்தியா தென்மேற்கு பருவக்காற்றால் 80 விழுக்காடு மழைப்பொழிவைப் பெறுகிறது.

மெரினா ராஜ் -வத்திக்கான்

காற்று என்பது வாயு எனப்படும் வளிமங்கள் அதிகமாக  ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு நகரும் நிலையைக் குறிக்கின்றது.  வளிமண்டலத்தில் வளிமம் எனப்படும் வாயு அதிகளவில்  நகரும்போது காற்று உண்டாகின்றது. விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் அடைந்த துகள்கள்களின் வெளியேற்றம் சூரியக் காற்று எனவும், கோள்களில் இருந்து வெளியேறும்  நிறை குறைந்த, வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோட்காற்று (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன. சூரியனிடமிருந்து வரும் வெப்பமானது ஒரே அளவில் பூமியை வந்தடைந்தாலும் ஒரே சமயத்தில் பூமியின் சில பகுதிகள் வெப்பமாகவும், சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருக்கின்றன. இதற்கு புவியின் கோள அமைப்பும், 23½ டிகிரி சாய்வு நிலையில் அதன் சுழற்சியுமே  காரணங்களாகின்றன.

இதனால் புவியின் நிலப்பரப்பு நீர்பரப்பினைவிட வேகமாக வெப்பமாகவும், வேகமாக குளிர்ச்சியாகவும் மாறுவதால் நில மற்றும் நீர் பரப்புகள் வேறுபட்ட வெப்பநிலையைக் கொண்டுள்ளன. அவற்றின் மேற்பரப்பிலுள்ள காற்றுக்களின் அழுத்தமும் வேறுபாடடைகின்றன. இதனால் காற்றானது அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி வீசத் தொடங்குகின்றது. இந்நிகழ்வு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழ்வதால் இவை பருவக்காற்றுகள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறு வீசும் பருவக்காற்றுகள் பல இடங்களில் மழைப் பொழிவினை ஏற்படுத்துகின்றன. தென்மேற்குப் பருவக்காற்றால் இந்தியாவின் பெரும்பாலான இடங்கள் மழையைப் பெறுகின்றன. தமிழ்நாடு, ஆந்திராவின் கிழக்கு கடற்கரைப்பகுதிகள் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக மழையைப் பெறுகின்றன. (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2022, 12:29