தேடுதல்

இந்தியாவில் காற்று மாசு இந்தியாவில் காற்று மாசு  

இனியது இயற்கை – சென்னையில் காற்று மாசு!

காற்றிலுள்ள நுண்துகள்கள், எளிதாக நம் நுரையீரலின் உள்ளுறுப்புகளுக்கு உள்ளே செல்ல முடியும் என்பதுடன் இரத்த ஓட்டப் பாதையிலும் அவை கலந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி காற்று மாசுபாட்டில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்தின் காற்று தரம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 2021-ஆம் ஆண்டிலும் மிக மோசமாகவே இருப்பதாக அண்மையில் வெளியான Healthy Energy Initiative என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையின் 20 இடங்களில் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காற்று தர அளவீடான PM 2.5 என்ற நுண்துகள்களின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3.8 மடங்கு வரை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, காற்று மாசு நுரையீரலை மட்டுமே பாதிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காரணம், அது காற்றிலுள்ள நுண்துகள்களால், எளிதாக நம் நுரையீரலின் உள்ளுறுப்புகளுக்கு உள்ளேயும் செல்லமுடியும். மேலும் அது இரத்த ஓட்டப் பாதையிலும் கலந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால், இதயப் பாதிப்புகள் கூட ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆகவே, காற்று மாசு குறித்த நாம் அதிமாக அக்கறை கொள்ளாவிட்டால் நமது உடல்நலம் மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்பதை நமது கவனத்தில் கொள்வோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2022, 13:43