இனியது இயற்கை – சமையலறையில் நெருப்பு உண்டாக்கும் பாதிப்புகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதால் கவனத்துடன் செயல்படுவது மிக அவசியம். சமையல் அறையில் மின்சாரம், மின் உபகரணங்கள், எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவை அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன. நெருப்பினால் உண்டாகும் பாதிப்புகள் கவனக்குறைவு மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் ஏற்படுகின்றன. எனவே இந்நெருப்பின் பாதிப்புக்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள சில முக்கியமான வழிமுறைகளைக் கையாளவது மிகவும் அவசியம்
காற்றோட்டமான தரைமட்ட பகுதியில் நிமிர்ந்த நிலையிலேயே எப்பொழுதும் சிலிண்டர் எனப்படும் வாயு உருளைகள் வைக்கப்படவேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் சமையல்வாயு அடுப்பு இருக்கும்படியும், வாயு உருளைகளின் குழாய்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வதும் அவசியம். மேலும் குளிர்சாதனப்பெட்டி போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைப்பதை தவிர்ப்பதால் மின் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். காற்றை விட வாயு எனப்படும் கேஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நிலையில் அது தரைமட்ட அளவில் பரவி நிற்கும். எனவே வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அறையில் உள்ள மின் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் ஜன்னல் கதவுகளை நன்றாக திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி வாயு வெளியேறும்படிச் செய்ய வேண்டும். உடைந்த மின்இயந்திரங்களைத் தொட்டு விடாமல் அவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் வழியாக சமையலறையில் உண்டாகும் நெருப்பின் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்