தேடுதல்

மீட்புப்பணியில் தீயணைப்புப் படையினர்  மீட்புப்பணியில் தீயணைப்புப் படையினர்  

இனியது இயற்கை - தீயணைக்கும் வழிமுறைகள்

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்படும் தீயை அணைப்பதற்கு துவக்க நிலையிலேயே தண்ணீரை பயன்படுத்துவது, ஆபத்து நிறைந்ததாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தீ என்பது, ஒரு வேதியியல் மாற்றமாகும். ஓர் எரியக்கூடிய பொருள் தேவையான அளவு வெப்பமடைந்ததும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருவதற்கு தீ என்று பெயர். தீ ஏற்படுவதற்கு, எரியும் பொருள், தேவையான அளவு ஆக்ஸிஜன்,  தேவையான அளவு வெப்பம் என மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன.                               

தீ உண்டாவதற்கு தேவைப்படும் மூலபொருட்கள் மூன்றில் ஒன்றினை அகற்றிவிட்டால் தீ அணைந்துவிடும். எனவே, தீயணைக்கும் வழிமுறைகள் மூன்றாக அமையும்.

எரியும் பொருளை தவிர்த்து, சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விடுதல் முதல் வழியாகும். இதனை பட்டினி போட்டு அணைத்தல் என்றும் கூறப்படும்.

இரண்டாவதாக, எரியும் பொருளின்மீது, தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்குத் தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்துவிடும். எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்படும் தீயை அணைப்பதற்கு தண்ணீரைப் பயன்படுத்தினால் தண்ணீரைவிட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின்மேல் வந்துவிடும் காரணத்தாலும், வெப்பத்தினால் தண்ணீர்(H2O) பிரிந்து ஆக்சிஜன் மூலக்கூறுகள் பிரிவதினாலும், நெருப்பு அதிகமாகும். எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க கார்பன்டை ஆக்ஸைடு அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால், நெருப்பிற்குத் தேவையான ஆக்சிஜன் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும்.

மூன்றாவதாக, எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைத்தல் முறையாகும். எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றைத் தடைசெய்து தீயை அணைத்துவிடும். இதனைத் திணறடித்தல் என்று கூறுவர்.

மின்சாரத் தீ ஏற்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். அதற்குப் பிறகு எரிகிற பொருளை பொறுத்து அதற்கேற்ற தீ அணைப்பானை பயன்படுத்த வேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2022, 15:41