தேடுதல்

மனதிற்கு அமைதி தரும் தியானம் மனதிற்கு அமைதி தரும் தியானம்  

இனியது இயற்கை - நோய் தீர்க்கும் மூச்சுப்பயிற்சி.

மூச்சுப்பயிற்சியின் போது, வாயில் சுரக்கும் உமிழ்நீரில் உள்ள நிறைய புரதங்கள், புற்றுநோய் உருவாவதைத் தடுப்பதற்கும் துணைபுரிகின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் சுவாசிக்கும் காற்று நம் உடல் மற்றும் மனநலனில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. மூக்கின் வழியே நாம் உள்ளிழுக்கும் காற்று முறையாக செய்யப்படும்போது மூச்சுப்பயிற்சியாக மாறி, நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது. முறையாயான காலஅளவில் செய்யப்படும் மூச்சுப்பயிற்சியின் போது, வாயில் சுரக்கும்  உமிழ்நீரில்  நிறைய புரதங்கள் இருக்கின்றன என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம் மனம் மற்றும் உடல் ரீதியான செயற்பாடுகளுக்கு இன்றியமையாததாகத் திகழும் இப்புரதங்கள் நரம்பு வளர்ச்சிக்குக் காரணியாகவும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதிலும், புற்றுநோய் உருவாவதைத் தடுப்பதிலும் துணைபுரிகின்றன.

இப்புரதங்கள் அதிகரிக்கும் பொழுது, நோய்க்கிருமிகள் உடலினுள் நுழையும் முக்கிய வாயில்களான நாசி, வாய், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய்களில் உள்ள கிருமிகள்  அழிக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்குகின்றன. மேலும் இன்றைய கோவிட் நுண்கிருமித்தொற்று நோய் போன்றவற்றையும் சமாளிக்கும் திறன் கொண்டவையாக இப்புரதங்கள் இருப்பதாக அண்மை ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2022, 13:06