தேடுதல்

சொமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்  சொமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்  

சொமாலியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு ஐ.நா. கண்டனம்!

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சொமாலியாவுடன் ஐ.நா துணை நிற்கும் : அந்தோனியோ கூட்டேரஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சொமாலியாவில் நிகழ்ந்துள்ள கொடூரமான தாக்குதல்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சோமாலியாவுடன் ஐ.நா. ஒன்றித்திருப்பதாகவும் கூறியுள்ளார் அவ்வமைப்பின். தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.

சொமாலியா நாட்டுத் தலைநகர் Mogadishuவில் அக்டோபர் 29, இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற இரட்டைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சொமாலியா அரசு மற்றும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சொமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணி அமைப்பகமும் (UNSOM) பயங்கரவாதத்திற்கு எதிராக சொமாலியா மக்கள் அனைவருடனும் இணைந்து நிற்பதாக உறுதியளித்துள்ளது.

அக்டோபர் 29, இச்சனிக்கிழமையன்று, Mogadishu நகரின் கல்வி அமைச்சக கட்டடத்திற்கு வெளியே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மற்றும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களுள் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், கைம்பெண்கள், சிறார் போன்றோரும் உள்ளடங்குவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2022, 13:16