தேடுதல்

வானில் தோன்றும் வானவில் வானில் தோன்றும் வானவில்  

இனியது இயற்கை – வானவில் உணர்த்தும் வாழ்வியல் பாடங்கள்!

வானவில்லின் 7 நிறங்களும் மனிதர் அனைவரும் நாடு, மதம், இனம், மொழி, சாதி, கலாச்சாரம், பண்பாடு ஆகிய 7 வேறுபாடுகளையும் களைந்து வாழ அழைக்கின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வானவில் மானுடத்திற்கு மகிழ்ச்சியின் அடையாளமாக அமைகின்றது. மழைபெய்து ஓய்ந்ததும் வானத்தில் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது இது. வானவில்லில் மொத்தம் ஏழு நிறங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் சில வாழ்வியல் பாடங்கள் குறித்துப் பேசுகின்றன. சிவப்பு நிறம் மங்களகரமான நிறங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒருவர் உடலளவிலும், மனதளவிலும், வலிமைபெற இந்நிறத்தின்மீது மனதை ஒருநிலைப்படுத்தித்  தியானிக்கலாம். ஆரஞ்சு நிறம் பாசத்தையும், அறிவுக்கூர்மையையும் அடையாளப்படுத்துகிறது. மேலும் இது நம்மிடம் உள்ள தீயகுணங்களை நீக்கி, நம்மை புனிதத் தன்மையில் வளரச் செய்கிறது. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்து மனத்திடத்தை பலப்படுத்துகின்றது. மேலும் இது ஞானம் மற்றும் நம்பிக்ககையின் அடையாளமாக அமைகின்றது. 

பச்சை நிறம் வாழ்வாதாரத்தின் நிறமாக அமைவதுடன், சுற்றுப்புறச் சூழலையும், நலமான வாழ்வையும் பேணவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது. ஊதா நிறம் முழுமையான தெய்வீகத் தன்மை கொண்டதாய், மனிதர் பெறவேண்டிய மன அமைதியை உணர்த்துகிறது. கருநீல நிறம், ஆன்மிகத்தில் ஆழ்நிலையை நோக்கிச் செல்ல உதவுகிறது  இறுதியாக, ஊதா நிறம் ஆன்மிகப் பாதையின் நுழைவாயிலாக அமைவதுடன், நமது உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தையும் குறித்துக் காட்டுகிறது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக, வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களும் மனிதர் அனைவரும் நாடு, மதம், இனம், மொழி, சாதி, கலாச்சாரம், பண்பாடு ஆகிய ஏழு வேறுபாடுகளையும் கடந்து ஓர்குலமாய் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற உன்னதமான பாடத்தைக் கற்றுத்தருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2022, 13:10