இனியது இயற்கை - வானம் நம் வசமாகட்டும்!
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாயத்தை யாராலும் தொட முடியாது, பார்க்கவும் முடியாது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். ஆகாயம், மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும், மண் ஆகியவை தோன்றக் காரணமாகவும், அதற்கு முன்பேயும் உள்ளது.
வானம் என்பது பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்து காணப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். இது வளிமண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும். பூமிக்கு வெளியேயிருக்கும் காற்று, வெளியேயிருந்து வரும் இடி மின்னலிலிருந்து தோன்றும் தீ, மேகக்கூட்டத்தின் நீர், பல்லாயிரம் கோடி கோள்களின் நிலப்பரப்பு என நான்கு பெரும்பூதங்களும் இந்த ஐந்தாவது பெரும்பூதத்துக்குள் அடங்கியிருப்பதைக் காண்கிறோம். அதனால்தான் ஆகாயத்திற்கு தனி முதலிடம் இருக்கின்றது. அனைத்திலும், வானம் என்பது இன்றியமையாதது. இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள், முகில், வானவில் என பலவும் வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில இருப்புகளாகும்.
ஆதிகாலத்திலிருந்தே மனிதன் ஏதாவது ஒரு சாதனையைச் செய்து முடித்தவுடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். ஆண்டவனை அங்குதான் தேடிக்கொண்டிருக்கிறான். வாழ்வின் உயரத்தை எட்டுவதற்கு, ஆகாயத்தை தன் வசமாக்கப் பார்க்கிறான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்