வங்கதேசத்தில் நிகழ்ந்த கட்டிட வெடிகுண்டு தாக்குதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வங்கதேசத்தில் நிகழ்ந்த கட்டிட வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 17 பேர் இறந்துள்ளனர் என்று காவல்துறை ஆய்வாளர் Bacchu Mia அவர்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மார்ச் 07, இச்செவ்வாயன்று, வங்கதேசத் தலைநகரின் வணிக மாவட்டத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால், வங்கதேசத்தில் அபாயகரமான கட்டிடத் தீ மற்றும் கட்டிட வெடிப்புகள் பொதுவானவை என்றும், அங்குப் பாதுகாப்பு செயல்பாடுகள் என்பது பெரும்பாலும் மந்தமாக உள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது சதிச் செயலா அல்லது விபத்தா எனக் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று இந்த விபத்துக் குறித்து டாக்கா காவல்துறை உயரதிகாரியான Khandaker Golam Faruq அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 112-க்கும் மேற்பட்டோர் தலையில் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் பிற காயங்களுக்கு சிகிச்சை பெற்ற்று வருகின்றனர் என்று இம்மருத்துவமனை இயக்குனர் நஸ்முல் இஸ்லாம் அவர்களும் AFP செய்தி நிறுவனத்திடம் இடம் கூறியுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்