தேடுதல்

மோதலால் புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் மோதலால் புலம்பெயர்ந்து செல்லும் மக்கள்   (ANSA)

சூடானில் தீவிரமடைந்து வரும் மோதல்கள்

சூடானில் நிகழ்ந்து வரும் மோதல்கள் ஒரு மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் அதன் பாதுகாப்புக்குப பெரிதும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானின் தலைநகரில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் வேளை, புரட்சிப்படை வீரர்களிடமிருந்து முக்கியத் தளங்களைப் பாதுகாக்க அந்நாட்டின் இராணுவம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நகரின் தெற்குப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் மற்றும் மோதல்கள் கேட்கப்படுவதாகவும், பக்கத்து நகரங்களான பஹ்ரி மற்றும் ஓம்டுர்மன் பகுதிகளில் நைல் நதியின் குறுக்கே கடும் எறிகணை தாக்குதல்கள் இருப்பதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இம்மோதல்கள் ஒரு மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்குப் பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இது சூடானுக்குள் 7,00,000-க்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்துள்ளதுடன் ஏறத்தாழ 2,00,000 பேரை அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருத்தந்தை வேண்டுகோள்

இந்நிலையில், நெருக்கடிக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு போரிடும்  தரப்புகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும் விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2023, 14:07