தேடுதல்

மெக்சிகோ சிறார் மெக்சிகோ சிறார் 

முறைகேடுகளுக்கு உள்ளாகும் மெக்ஸிகோ புலம்பெயர்ந்தோர்

ஏழு எல்லை நகரங்களில் 40 வரவேற்பு மையங்களில் பணிபுரிந்து புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் உளவியல் உதவிகளையும் வழங்கிவருகின்றது மெக்சிகோ அமைப்பு

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏறக்குறைய 4,000 பெண்கள் மற்றும் சிறார் வீடின்றி தெருக்களில் வாழ்கின்றார்கள் என்றும், வன்முறை மற்றும் முறைகேடுகளால் ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளது Save the Children என்னும் பன்னாட்டு அமைப்பு.

மே 15, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் Save the Children அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், பாலைவனம் அல்லது நதி போன்ற ஆபத்தான இடங்கள் வழியாக எல்லையை கடக்க முயற்சிக்கும் குடும்பங்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் மெக்ஸிகோவின் இயக்குநர் மரிபினா மெனெண்டஸ் கார்பஜல்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக சேதப்படுத்தும் இப்பயணங்கள், பாதுகாப்பாகவும் விரைவாகவும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாவிட்டால், பல சிறார்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், பல  சிறார் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து நீண்ட தூரம் வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் கார்பஜல்.

அமெரிக்காவின் எல்லையை அடைந்துள்ள அம்மக்கள் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சத்துடனும் கவலையுடனும் வாழ்கின்றனர் என்றும், மெக்ஸிகோவில், Save the Children அமைப்பு ஏழு எல்லை நகரங்களில் 40 வரவேற்பு மையங்களில் பணிபுரிகின்றது. இது புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் உளவியல் உதவிகளையும் வழங்கிவருகின்றது என்றும் கார்பஜல் கூறியுள்ளார்.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ஏறக்குறைய 15,000 புலம்பெயர்ந்தோருக்கு உதவி வரும் மெக்சிகோ அமைப்பு, மனிதாபிமான அவசரநிலைக்கு தீர்வு காண்பதற்காக வரும் வாரங்களில் தன் திட்டம் பலப்படுத்தி விரிவுபடுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் அதன் இயக்குனர் கார்பஜல்.

புலம்பெயர்ந்த பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர் என்றும், பலர் எல்லைக் கோட்டில் முகாமிட முடிவு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ள  கார்பஜல் அவர்கள், சிறார் மற்றும் இளம் பருவத்தினரின் பாதுகாப்பிற்கான திட்டங்களையும் கொள்கைகளையும் வலுப்படுத்துமாறு மெக்சிகோ அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெக்சிகோ அரசு புலம்பெயர்ந்தோர் உதவி ஆணையத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றும், சிறார் மற்றும் இளம் பருவத்தினரைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டை முன்னெப்போதையும் விட அதிகமாக வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2023, 12:59