தேடுதல்

உக்ரேனிய குழந்தைகள் உக்ரேனிய குழந்தைகள்  

உக்ரைனுக்குக் கூடுதலாக 6,57,000 அளவிலான தடுப்பூசிகள் : UNICEF

தட்டம்மை என்பது ஒரு தொற்று நோயாகும், இது மிக விரைவாகப் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை சராசரியாக ஏழு தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு அதை பரவச்செய்ய முடியும் : Ihor Kuzin.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனின் தேசியத் தடுப்பூசித் திட்டத்திற்கு ஆதரவாக உக்ரைனுக்குக் கூடுதலாக 6,57,000 அளவிலான தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா (MMR) தடுப்பூசியை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளது UNICEF நிறுவனம்.

இது குறித்துக் கூறிய உக்ரைனுக்கான யுனிசெஃப் அமைப்பின் நோய்த்தடுப்பு நிபுணர் Muhammad Tariq Iqbal அவர்கள், இந்நோயைக் குணப்படுத்துவதற்கான குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லையென்றாலும், தடுப்பூசிகள் வழியாகக் குழந்தைகளையும் மக்களையும் தட்டம்மையிலிருந்து பாதுகாக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உக்ரைனில் அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், போரின்போது ​​கூட்டம் அதிகமாக இருப்பதால், வான்வழித் தாக்குதல் முகாம்களில், தட்டம்மை நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் Iqbal.

மேலும் உக்ரைனின் நல அமைச்சகம், யுனிசெப் மற்றும் WHO எனப்படும் உலக நல அமைப்புடன் இணைந்து, அந்நாட்டில் தட்டம்மை தொற்றுநோயைத் தடுப்பதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் உரைத்துள்ளார் துணை அமைச்சரும் மாநில நலத் தலைமை மருத்துவ அதிகாரியுமான Ihor Kuzin.

தட்டம்மை என்பது ஒரு தொற்று நோய் என்றும், இது மிக விரைவாகப் பரவுகிறது என்றும் எச்சரித்துள்ள Kuzin. அவர்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை சராசரியாக ஏழு தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு அதை பரவச்செய்ய முடியும் என்றும், தடுப்பூசி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2023, 13:37