உலகளவில் ஆப்பிரிக்காவின் திறனை உறுதிப்படுத்த
திமினா செலின் இராஜேந்திரன் - வத்திக்கான்
ஜெனிவாவில் நவம்பர் 21 அன்று நடைபெற்ற UNCTAD என்ற வர்த்தக மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் 74வது நிர்வாக அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடு மற்றும் பிற அனைத்துலக நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் எத்தோரே பேலஸ்ட்ரெரோ அவர்கள், உலகளவில் ஆப்பிரிக்காவின் குறிப்பிடத்தக்க திறனை உறுதிப்படுத்துவதற்காக, விநியோக தொடர்புகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவையை புதிய அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதை திருப்பீடம் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஆப்பிரிக்காவின் செழுமையான வளங்களை சமமாகப் பயன்படுத்துதல் போன்றவைகளை உறுதிசெய்யும் இந்த அறிக்கையின் முயற்சிகளை திருப்பீடம் ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார் பேராயர் பலஸ்ட்ரெரோ
ஒரு தனிநபர் அவரது பிறந்த இடத்தின் காரணமாகவோ, அதிக வாய்ப்புள்ள நாடுகளில் பிறந்த மற்றவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் காரணமாகவோ, ஒதுக்கப்படுதல் முறையற்றது என திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளதை மேற்கோள் காட்டி, அனைத்து நாடுகளையும் உலகளாவிய விநியோகச் தொடர்புகளில் ஒருங்கிணைத்தல் அவசியமென பேராயர் பலஸ்ட்ரெரோ கூறியுள்ளார்,
UNCTAD திட்டச் செலவின் ஒப்பீட்டு அளவில் ஆப்பிரிக்காவில் மொத்த திட்டச் செலவீனம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், ஆப்பிரிக்காவின் பெரும் ஆற்றல் திறம்பட செயல்படுத்துவதற்கு UNCTAD, உறுப்பு நாடுகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு, மற்றும் ஆதரவினை தீவிரப்படுத்த இவ்வறிக்கை ஒரு சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைக்கான அழைப்பு எனக் கூறியுள்ளார் பேராயர் பலஸ்ட்ரெரோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்