தேடுதல்

காசாவின் ஆக்கிரமிக்கப்பட்ட  பகுதி காசாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி 

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் காசா பகுதி சிறார்

ஏறக்குறைய 12 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப்பாதுகாப்பின்மையினால் ஏற்படும் பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் காசா பகுதியில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏறக்குறைய 3,35,000 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிரிழக்க நேரிடும் ஆபத்து உள்ளது என்றும், 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையினால் ஏற்படும் பேரழிவு நிலையை எதிர்கொள்கின்றனர் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது யுனிசெஃப் அமைப்பு.

டிசம்பர் 23 சனிக்கிழமை IPC  எனப்படும் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையை வலியுறுத்தி காசா பகுதியில் ஏற்படும் பஞ்சம் குறித்த ஆபத்தை எடுத்துரைத்துள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டு அமைப்பு.

ஏறக்குறைய 12 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப்பாதுகாப்பின்மையினால் ஏற்படும் பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், வரும் வாரங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் ஏறக்குறைய 10000 பேர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இறக்க நேரிடும் ஆபத்தில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மருத்துவமனைகள் செயல்படவில்லை என்றும் 1,55,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1,35,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப் அமைப்பு.

அனைத்துத் தரப்பினரும் உடனடியாகவும் முழுமையாகவும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், வேறுபாடு மற்றும் விகிதாசாரக் கொள்கைகள் அடங்கும், பொதுமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், அனைத்து பிணையக் கைதிகளை விடுவிக்கவும் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான அவர்களின் கடமைகளை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2023, 14:08