தேடுதல்

எரிந்து சாம்பலான ரொஹிங்கியா அகதி முகாம்கள் எரிந்து சாம்பலான ரொஹிங்கியா அகதி முகாம்கள்  (AFP or licensors)

தீ விபத்தில் 7000 ரொஹிங்கியா அகதிகள் பாதிப்பு

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட Rohingya அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துவரும் பங்களாதேசின் Cox's Bazar அகதிகள் முகாம், உலகின் மிகப்பெரும் அகதிகள் முகாமாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் மிகப்பெரும் அகதிகள் முகாமாக இருக்கும் பங்களாதேசின் Cox's Bazar முகாமில் ஜனவரி 7ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 7000 பேர் வரை தங்கள் உறைவிடங்களை இழந்துள்ளனர்.

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட Rohingya அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துவரும் பங்களாதேசின் Cox's Bazar அகதிகள் முகாமில் திடீரென தீ பற்றியதில் பல நூற்றுக்கணக்கான தற்காலிக முகாம்கள் எரிந்துள்ளன.

இது தவிர, கல்வி மையங்கள், மசூதிகள், நலமையங்கள், கழிவறைகள், என பலவும் அழிவுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மார் அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி அங்கிருந்து அண்மை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா இஸ்லாம் சிறுபான்மையினரான அகதிகள் பெருமளவில் பங்களாதேசில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பங்களாதேசின் Cox's Bazar அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிவுக்குள்ளாகின. கடந்த ஆண்டின் தீ விபத்தில் 12,000 பேர் தங்கள் குடியிருப்புக்களை இழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2024, 14:50