தேடுதல்

ஆப்கான் குழந்தைகள் ஆப்கான் குழந்தைகள்   (AFP or licensors)

5,000 மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை!

வரவிருக்கும் நாட்களில் ஐந்து இலட்சத்து, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை எவ்வாறு தொடரலாம் என்பதைத் தேர்வுசெய்யும் நிலையில் இருக்கின்றனர் : Save the Children அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குப் பிறகு தங்கள் கல்வியைத் தொடர்முடியாத நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

மாணவர்களை உந்துதல் மற்றும் ஊக்கமளிக்கும் தேர்வுகளை நோக்கிச் செல்ல திட்டமிடப்பட்ட அனைத்து கல்விச் சுழற்சிகளிலும் நோக்குநிலை சீர்திருத்தத்தின் உறுதியான நடைமுறைக்கு அழைப்பு விடுத்துள்ள அவ்வமைப்பு, மாணவர்கள் தங்களுக்கான படிப்பினைத் தேர்வு செய்வதில், அவர்களுடன் பயணிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது.

வரவிருக்கும் நாட்களில் ஐந்து இலட்சத்து, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை எவ்வாறு தொடரலாம் என்பதைத் தேர்வுசெய்யும் நிலையில் இருக்கின்றனர் என்று எடுத்துக்காட்டியுள்ள அவ்வமைப்பு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு, இடைநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு மாறுவது பெரும்பாலும் முக்கியமானதொரு தருணமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.

மாணவர்களின் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள், அப்பகுதியில் கிடைக்கும் கல்விச் சலுகை, சக குழுவின் செல்வாக்கு, உண்மையான அல்லது உணரப்பட்ட எதிர்கால வேலை வாய்ப்புகள் போன்ற எண்ணற்ற காரணிகள் மாணவர்கள் தங்களின் படிப்பைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் கூறியுள்ளது அவ்வமைப்பு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2024, 15:35