தேடுதல்

ஈக்குவதோரில் இளையோரிடையே திருஅவையின் பணி ஈக்குவதோரில் இளையோரிடையே திருஅவையின் பணி 

ஈக்குவதோரில் குழந்தைகள் மற்றும் சிறாரின் கொலைகள் 640% அதிகரிப்பு

ஈக்குவதோரில் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைகளைக் காரணம் காட்டி நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் 43 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் கொலைச் செய்யப்படுவது ஈக்குவதோர் நாட்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துவருவதாக குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.வின் குழந்தைகள் நிதி நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் கொலைச் செய்யப்படுவது 640 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் 770 குழந்தைகளும் பதின்ம வயதினரும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

ஈக்குவதோரில் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைகளைக் காரணம் காட்டி நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் 43 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் போதிய கல்வி வசதிகளின்றி துன்புறுவதாகவும் யுனிசெப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் 104பேர் ஈக்குவதோர் நாட்டில் கொலைச் செய்யப்பட்டிருக்க, இது 2023ஆம் ஆண்டில் 770 என அறிவிக்கும் யுனிசெப் அமைப்பு, 2019ஆம் ஆண்டைவிட இது 640 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கிறது.

ஆயுதக்குழுக்களால் பதின்ம வயதினர் ஆயுதம் தாங்க வைக்கப்படுவதும், சிறாருக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் மறுக்கப்படுவதும் ஈக்குவதோரில் அதிகரித்துவரும் நிலையில், கல்வி நிலையங்களைத் திறக்கத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக யுனிசெப் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2024, 15:29