தேடுதல்

வடக்கு காசா பகுதி சிறார் வடக்கு காசா பகுதி சிறார்  (AFP or licensors)

வடக்கு காசாவை நெருங்கும் பஞ்சத்தினால் பாதிக்கப்படும் சிறார்

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் வடக்கு காசாவில் உயிர் இழக்கின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

வடக்கு காசாவில் பஞ்சம் நெருங்கி வந்துவிட்டது என்றும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தலைமை இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல்.

மார்ச் 25 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல் அவர்கள் அடிப்படை உதவிப் பொருள்களுக்கானத் தேவையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிப்பொருள்கள் முழுமையாக வழங்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு காசாவில் வாழும் குழந்தைகளின் நலவாழ்வு மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பஞ்சமானது நெருங்கி வந்துவிட்டது என்றும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் கேத்தரின் ரூஸ்ஸல்.

காசாப்பகுதியில் உள்ள எல்லா இடங்களிலும் வாழ்கின்ற, தேவையிலிருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைச் சென்றடையும் மனிதாபிமான அமைப்புகளின் செயல்களுக்கு முழுமையான மற்றும் பாதுகாப்பான அணுகுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரூஸ்ஸல் அவர்கள், குழந்தைகளின் நலவாழ்வும் வாழ்க்கையும் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2024, 13:56