தேடுதல்

உணவிற்காகக் காத்திருக்கும் இராஃபா பகுதி சிறார் உணவிற்காகக் காத்திருக்கும் இராஃபா பகுதி சிறார் 

கற்பனை செய்ய முடியாத அளவில் துன்பங்களை அனுபவிக்கும் சிறார்

புலம்பெயர்தல், குண்டுவெடிப்பு, பசி, பட்டினி, உடல் நோய்கள் போன்ற பல துன்பங்களால் குழந்தைகள் பல்வேறு இன்னல்களையும் இடையுறுகளையும் அனுபவித்து வருகின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவின் இராஃபா பகுதியில் ஏறக்குறைய 6,00,000 குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்  என்றும், கற்பனை செய்ய முடியாத பல துன்பங்களை அக்குழந்தைகள் அனுபவித்து வருகின்றனர் என்றும் யுனிசெஃப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மார்ச் 11 திங்கள் கிழமை வெளியிடப்பட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் காசாவில் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி இவ்வாறு எடுத்துரைத்துள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பு.

புலம்பெயர்தல், குண்டுவெடிப்பு, பசி, பட்டினி, உடல் நோய்கள் போன்ற பல துன்பங்களால் குழந்தைகள் பல்வேறு இன்னல்களையும் இடையுறுகளையும் அனுபவித்து வருகின்றனர் என்றும், இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் மிக ஆபத்தான இடத்தில் குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப்.

இராஃபாவில் குழந்தைகள் செல்வதற்கான பாதுகாப்பான இடம் இல்லை என்றும், போரை நிறுத்துதல், பிணையக்கைதிகளை விடுவித்தல், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படுதல் போன்றவற்றின் வழியாக அக்குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற ஒரு வழி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2024, 10:55