தேடுதல்

காசா பகுதி சிறார் காசா பகுதி சிறார்  (AFP or licensors)

மக்களை நெருங்கி வரும் உணவுப்பற்றாக்குறை

காசாவில் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறையால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன

மெரினா ராஜ் - வத்திக்கான்

உணவுப்பற்றாக்குறை மக்களை நெருங்கி வருகின்றது, நாடு அழிவை நோக்கிச் செல்லும் நிலையின் வேகம் அதிர்ச்சியளிக்கின்றது என்றும், காசாவில் வாழ்கின்ற குழந்தைகளுக்காக உடனடி போர் நிறுத்தம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார் யுனிசெஃப் இயக்குனர் கேத்தரின் ருஸ்ஸல்.

காசாவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டுள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் யுனிசெஃப் அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் கேத்தரின் ருஸ்ஸல்.

காசாவில் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறையால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன என்றும், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மனிதாபிமான உதவிபுரிந்தவர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டு அமைப்பின் தலைமை இயக்குனர் கேத்தரின் ருஸ்ஸல்.    

ஏறக்குறைய 180 நாள்களுக்கு முன்பு காசாவில் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள கஃபிர் மற்றும் ஏரியல் என்னும் இரு குழந்தைகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், சில குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை, பெற்றோர்களை இழந்துள்ளனர், அவர்கள் இன்னும் பிணையக்கைதிகளாக இருக்கின்றனர் என்றும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ருஸ்ஸல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2024, 11:47