உக்ரைனின் Dnipro மற்றும் Novooosynove-இல் 6 குழந்தைகள் காயம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 2, இச்செவ்வாயன்று, உக்ரைனின் டினிப்ரோவில் நேற்று நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் காயமடைந்ததாகவும், பள்ளி ஒன்று சேதமடைந்ததாகவும், மனதை நொறுக்கும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
ஏப்ரல் 3, இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தக் கவலைதரும் செய்தியை எடுத்துக்காட்டியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Karkiv பகுதியின் Novooosynove-வில் நிகழ்ந்த, மற்றொரு தாக்குதலில் 11 வயது குழந்தை காயமடைந்ததாக மேலும் தெரிவிக்கிறது யுனிசெஃப் நிறுவனம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைனில் நிகழ்ந்து வரும் போரில் ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்