தேடுதல்

Bucharest அகதிகள் முகாமில் உக்ரைன் குழந்தைகள் Bucharest அகதிகள் முகாமில் உக்ரைன் குழந்தைகள்  (ANSA)

உக்ரைன் போரால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

உக்ரைனில் போர் துவங்கிய 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 600 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 1350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் உக்ரைன் போரால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் முதல் மூன்று மாதங்களின் எண்ணிக்கையைவிட 40 விழுக்காடு அதிகம் என கவலையை வெளியிட்டுள்ளது குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 25 குழந்தைகள் போர் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தின் மூன்று வாரங்களில் மட்டும் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைகள் நல நிதி நிறுவனமான யுனிசெப் அறிவித்துள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் கூற்றுப்படி, போர் துவங்கிய 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 600 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 1350க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 36 மருத்துவக் கட்டிடங்கள், 140 கல்வி நிலையங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான வீடுகளும் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன, அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டில் பாதுகாப்பின்மை காரணமாக கல்வி நிலையங்களில் தங்கள் பெயர்களை பதிவுச் செய்த மாணவர்களுள் பாதி பேர் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளான கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளான போரும் என 4 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி உக்ரைன் நாட்டில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2024, 14:52