உக்ரைனின் கார்கிவ் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் 3 குழந்தைகள் காயம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனின் மத்திய கார்கிவ் பகுதியில் மே 14, இச்செவ்வாயன்று நிகழ்ந்த வான்வழித் தாக்குதலில் 3 குழந்தைகள் காயமடைந்தனர் என்று தனது எக்ஸ்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.
மேலும் இந்தத் தாக்குதல் குறித்தும், அதில் காயமடைந்த குழந்தைகள் குறித்தும் நிகோபோல் மற்றும் சுமி நகர்களிலும் பதிவாகியுள்ளது என்று கூறும் அதன் எக்ஸ்தள பக்கம், இந்தத் தாக்குதல் மிகவும் கொடியது என்றும், போர்களில் குழந்தைகள் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது என்றும் விண்ணப்பித்துள்ளது.
2022- ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் நிகழ்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை ஏறத்தாழ 2,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டுகிறது யுனிசெப் நிறுவனத்தின் எக்ஸ்தள பக்கம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்