தேடுதல்

இடம்பெயர்ந்து செல்லும் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்து செல்லும் பாலஸ்தீனியர்கள்  

இரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ஐநா நீதிமன்றம் உத்தரவு!

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இரஃபாவில் தனது இராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 26 மற்றும் மார்ச் 28 தேதிகளில் கடைசியாக வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்குப் பிறகு, காசாவில் தற்போது மனிதாபிமான நிலைமை மிகவும் பேரழிவைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது என்று, தனது ஆழ்ந்த கவலையைப் பதிவுசெய்துள்ளார் அனைத்துலக நீதிமன்றத்தின் தலைவர் Nawaf Salam

இரஃபா மீது பல வாரங்கள் குண்டுவீச்சுகளுக்குப் பிறகு, மே 6 அன்று 1,00,000 பாலஸ்தீனியர்களை வெளியேறும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டது என்று கூறியுள்ள Salam அவர்கள், அங்கு இராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதால், இது புதிய இடம்பெயர்தலுக்கு வழிவகுக்கிறது என்றும், எச்சரித்துள்ளார்.

இந்த வழக்கு ஐ.நா. இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம்சாட்டிய தென்னாப்பிரிக்காவால் அனைத்துலக நீதிமன்றமான ICJ-க்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2024, 14:47