காசாவிற்கு உதவிப்பொருள்கள் கிடைக்க, இஸ்ரயேல் படைகள் அனுமதி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தெற்கு காசாவின் சில பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கு வசதியாக இராணுவ நடவடிக்கைகளில் ஓர் இடைநிறுத்தத்தை இஸ்ரேயல் அறிவித்துள்ளது.
காசாவில் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை கொண்டு செல்வதற்கு இஸ்ரயேல் இராணுவம் அனுமதி மறுக்கிறது என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் யுனிசெப் நிறுவனம் தொடர்ந்து கூறிவந்த நிலையில் இத்தகையதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்.
மேலும் கரீம் ஷாலோமிலிருந்து சலா அல் தின் சாலைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் காலை 08:00 மணி முதல் மாலை 07:00 மணிவரை வரை இந்த இடைநிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்.
ஜூன் 15, சனிக்கிழமை மாலை பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஒரு கடினமான போர் என்று விவரித்த அதேவேளை, ஹமாஸை அழிப்பதிலும், காசாவில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிப்பதிலும் நாடு கவனம் செலுத்த வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்