தேடுதல்

இந்தியாவில் காற்று மாசுபாடு இந்தியாவில் காற்று மாசுபாடு   (AFP or licensors)

காற்று மாசுபாட்டால் உயிர்துறக்கும் இலட்சக் கணக்கான குழந்தைகள்!

ஒவ்வொரு நாளும், ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 2,000 குழந்தைகள் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகளால் இறக்கின்றனர் : யுனிசெஃப் அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2021-ஆம் ஆண்டில் உலகளவில் 81 இலட்ச மக்களின் இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாக அமைந்துள்ளது என்றும், இது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட இறப்புக்கான இரண்டாவது பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளது காலநிலை குறித்த யுனிசெஃப் மற்றும் ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டின் புதிய அறிக்கை

2021-ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 7,00,000-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குப் பிறகு உலகளவில் இந்த வயதினருக்கு இறப்புக்கான இரண்டாவது முக்கிய ஆபத்து காரணியாக அமைகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது அவ்வறிக்கை.

மேலும் இந்தக் குழந்தை இறப்புகளில் 5,00,000 பேர், மாசுபடுத்தும் எரிபொருட்களுடன் வீட்டில் சமைப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் ஏற்படுவது என்றும், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இது அதிகம் நிகழ்கிறது என்றும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

ஜூன் 19, இப்புதனன்று, ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் அறிக்கையின் ஐந்தாவது பதிப்பின் படி, காற்று மாசுபாடு மனித உடல்நலத்தில் அதிகரித்து வரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இது உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய ஆபத்து காரணியாக மாறியுள்ளது என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் எலினா கிராஃப்ட் அவர்கள், எங்கள் ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் அறிக்கை (SGA) தகவல் மற்றும் மாற்றத்திற்கான உத்வேகம் இரண்டையும் வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், காற்று மாசுபாடு மிகப்பெரிய உடல்நல தாக்கங்களைக் கொண்டுள்ளது என்றும், காற்றின் தரம் மற்றும் உலகளாவிய பொது உடல்நலத்தை மேம்படுத்துவது என்பது  நடைமுறை மற்றும் சாத்தியமானதுதான் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் கிராஃப்ட்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2024, 14:27