தேடுதல்

குழந்தைத் தொழிலாளருக்கு எதிராகக் குரல் குழந்தைத் தொழிலாளருக்கு எதிராகக் குரல்  

இத்தாலிய குழந்தைத் தொழிலாளர் குறித்த இரண்டாவது அறிக்கை!

2018-2022-ஆம் ஐந்தாண்டு காலப்பகுதியில் இத்தாலியில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் வேலை தொடர்பான அவர்களின் துயரங்கள் பற்றிய தரவுகளை இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியிடத்தில் சந்திக்கும் ஆபத்துகள், விபத்துகள் மற்றும் பாதுகாப்பு குறித்த இரண்டாவது புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஜூன் 12, இப்புதன், குழந்தைத் தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான உலக தினத்தை சிறப்பிக்கும் வேளை, இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை குழந்தை வருமானத்தில் ஒரு புதிய எண்ணிக்கையைச் சேர்க்கிறது என்று எடுத்துக்காட்டும் அந்நிறுவனம், ஆண் தொழிலாளர்களுக்கான மதிப்பிடப்பட்ட சராசரி வாராந்திர வருமானம் 2018-இல் 297 ஈரோவிலிருந்து (26,903 இந்தியப் பணம் ) 2022-இல் 320 ஈரோவாக (28,9739) மாறுகிறது என்றும், அதேவேளை பெண் தொழிலாளர்களுக்கு 2018- இல் 235 ஈரோவிலிருந்து (21,272) 2022-இல் 259 ஈரோவாக (23 324), உயர்கிறது என்றும், இதனால் ஆண் பாலினத்திற்கான நிலையான உயர் ஊதியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இத்தாலியின் யுனிசெஃப் தலைவர் Carmela Pace அவர்கள், யுனிசெஃப் நிறுவனம் இத்தாலியில் தோற்றுவிக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு இன்று சிறப்பிக்கப்படும் வேளை, குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த அறிக்கையை இந்நாளில் வெளியிடுவதாகவும், இப்பிரச்சனை மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2024, 15:20