பெருவெள்ளத்தால் 772000 பங்களாதேஷ் குழந்தைகள் பாதிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பங்களாதேஷ் நாட்டின் வடகிழக்குப் பகுதியின் பெருவெள்ளத்தால் 7இலட்சத்து 72ஆயிரம் குழந்தைகள் உட்பட 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் என்னும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதியமைப்பு அறிவித்துள்ளது.
தண்ணீர் மட்டம் உயர்ந்துவரும் நிலையில், நீரில் மூழ்குதல், சத்துணவின்மை போன்றவைகளால் உயிரிழப்பு, நீர் தொடர்புடைய தொற்றுநோய்களுக்கு உள்ளாதல், இடம்பெயரும் துயரங்கள், முகாம்களில் தவறாக நடத்தப்படல் போன்றவைகளுக்கு குழந்தைகள் உள்ளாவதாக யுனிசெப்பின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
பங்களாதேஷ் அரசின் ஒத்துழைப்புடன் 5 நாட்களுக்கு மேலாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் தேவையான அவசர உதவிகளை வழங்க முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறுகிறது இந்த ஐ.நா. அமைப்பு.
பக்ரீத் என்னும் இஸ்லாமிய விழாவை முன்னிட்டு, கல்விக்கூடங்கள் ஜூன் 13 முதல் ஜூலை 2 வரை மூடப்பட்டுள்ள நிலையில், 810க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏறக்குறைய 500 பள்ளிகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய 140 சிறு மருத்துவ உதவி மையங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்