தேடுதல்

Zambia குழந்தைகள் Zambia குழந்தைகள்  

Zambia-வில் 5-வயதுக்குட்பட்ட 52,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு!

Zambia-வில் 84 வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 52,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது: யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

Zambia-வில், வறட்சியால் பாதிக்கப்பட்ட 84 மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 52,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ஊட்டச்சத்து குறைபாட்டின் மிகவும் ஆபத்தான வடிவம் என்றும் கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.

ஜூன் 24, இத்திங்களன்று வெளியிட்டுள்ள புதியதொரு கணக்கெடுப்பில் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ள யுனிசெப் நிறுவனம், அடுத்த 12 மாதங்களுக்குள் அவசர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஐந்து வயதுக்குட்பட்ட மேலும் 2,76,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் Mutanga Mapani அவர்கள், நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்றும், இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளின் உடனடி அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்கூட்டிய தலையீடு இல்லாமல், குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதை இந்தத் தரவு தெளிவாகக் காட்டுகிறது என்றும் உரைத்துள்ளார் Mapani.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2024, 13:14