போர் நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் குறித்து ஹமாஸ் தலைவர் விவாதம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஹமாஸ் தலைவர் விவாதித்து வருகிறார்.
கடந்த வார இறுதியில், ஹமாஸ் பொலிட்பீரோ தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தின் உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெலுடன் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த விவாதம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தத்தை உள்ளடக்கியதாக இருந்தது.
அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் மற்றும் எகிப்திய பேச்சுவார்த்தையாளர்கள், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை தொடர்கின்றனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரண்டாவது போர்நிறுத்தத்தை அடைய நம்பிக்கையுடன் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரினால் கடந்த ஆண்டு 1,200 பேர் கொல்லப்பட்டனர் 250 பேர் கடத்தப்பட்ட நிலையில் ஹமாஸின் இத்தகைய செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்