தேடுதல்

பாலஸ்தீனிய குழந்தைகள் பாலஸ்தீனிய குழந்தைகள்  (AFP or licensors)

வெஸ்ட் பேங்க் பகுதியில் குழந்தைகள் கொல்லப்படுவது அதிகரிப்பு

அக்டோபரில் இஸ்ராயேல் - ஹமாஸ் போர் துவங்கியதிலிருந்து பாலஸ்தீனிய வெஸ்ட் பேங்க் பகுதியில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 250 விழுக்காடு அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ராயேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் துவங்கியதிலிருந்து பாலஸ்தீனிய வெஸ்ட் பேங்க் பகுதியில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 250 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் UNICEF அமைப்பு தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

Gaza Strip பகுதியில் மட்டுமே போர் இடம்பெற்று வந்தாலும், இப்போரின் விளைவுகள் பாலஸ்தீனத்தின் அனைத்து மக்களையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை, அதாவது ஒன்பது மாதங்களில் வெஸ்ட் பேங்க் பகுதியில் 143 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கு முந்தைய 9 மாதங்களில் 41 பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

கடந்த ஒன்பது மாதங்களில் 440க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் படுகாயமுற்றுள்ளதாகவும், பள்ளிக்குச் செல்லும் பாலஸ்தீனிய குழந்தைகள் இடையில் தடுக்கப்படுவதாகவும், தெருக்களில் நடந்து செல்லும்போது சுடப்படுவதாகவும் கூறும் யுனிசெப் அமைப்பு, இத்தகைய வன்முறைகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2024, 14:38