தேடுதல்

குழந்தைகளுடன் இடம்பெயரும் பெற்றோர் குழந்தைகளுடன் இடம்பெயரும் பெற்றோர்   (ANSA)

காசாவில் வன்முரை தொடர்வதால் அதிக குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்!

காசாவில் 90 விழுக்காட்டு மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் மற்றும் தெற்கு லெபனானில் இடம்பெற்ற தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர் : யுனிசெப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் காசாவில் 90 விழுக்காட்டு மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர், இதில் பலர் குழந்தைகள் என்றும், மக்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள இடங்களில் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது யுனிசெப் நிறுவனம்.

தனது எக்ஸ்தல பக்கத்தில் இந்தத் தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் நீடித்த போர் நிறுத்தத்துக்கும் தொடர்ந்து அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.

தெற்கு லெபனானில் வீடுகளுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் ஜூலை 16, இச்செவ்வாயன்று, குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது கொடூரமானது என்று குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினருக்குத் தங்களின் ஆதரவு என்றும் உள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2024, 12:55