கேரளாவில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் கேரளாவில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும்  (ANSA)

தெற்கு ஆசியாவில் மழையால் குழந்தைகள் பெருமளவில் பாதிப்பு

இந்தியாவில் 5 இலட்சம் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வெள்ளப் பெருக்கால் பாதிப்பைக் கண்டுள்ளன. தற்போதும் கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தெற்கு ஆசியாவின் வெள்ளப்பெருக்கு காரணமாக 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக யுனிசெப் என்ற குழந்தைகளுக்கான அவசரகால நிதியமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

தெற்கு ஆசியாவில் காலநிலை மாற்றம் தொடர்புடையவைகளால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் யுனிசெப் அமைப்பு, நேபாளத்தில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் 35 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 109 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் குறைந்தபட்சம் 1580 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என கூறுகிறது.

பங்களாதேசில் கடந்த மே மாதத்திலிருந்து வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியின் 61 இலட்சம் குழந்தைகளின் வாழ்வு தொடர் மழையால் பாதிப்பை அடைந்துள்ளது.

இந்தியாவில் 5 இலட்சம் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வெள்ளப் பெருக்கால் பெரும் பாதிப்பைக் கண்டுள்ளன. தற்போதும் கேரளாவின் வயநாடு பகுதியில் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகளும் பெரும்பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தமிழ் நாட்டிலும் குன்னூர், கோத்தகிரி பகுதியில் பெருமழை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அண்மை வெள்ளப்பெருக்கால் 58 பேர் உயிரிழந்துள்ளனர், 1900க்கும் மேறபட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 74 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2024, 14:10