தேடுதல்

பங்களாதேஷில் இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டி தென் ஆப்ரிக்காவில் பேரணி பங்களாதேஷில் இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டி தென் ஆப்ரிக்காவில் பேரணி  (AFP or licensors)

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும்

பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இடைக்கால அரசு உறுதி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதி வழங்கியுள்ளது.

15 ஆண்டுகள் பங்களாதேஷை ஆண்ட Sheikh Hasina அவர்கள், பதவியை விட்டு விலகி இந்தியாவுக்கு தப்பியோடியதையொட்டி, பங்களாதேசில் சிறுபான்மையினரின், குறிப்பாக இந்துக்களின் வீடுகள், வியாபார தலங்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது, நொபேல் அமைதி விருது பெற்ற Muhammad Yunus தலைமையிலான இடைக்கால அரசு.

இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்ற இடைக்கால அரசு, சிறுபான்மை மதத்தவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது.

பங்களாதேசின் புதிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை அவை, நாட்டின் மிக முக்கிய தலையான தேவைகள் குறித்து விவாதிக்கையில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

17 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பங்களாதேசில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்படும் எனவும் புதிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

ஜூலை மாதம் பங்களாதேசில் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டங்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2024, 15:25