தேடுதல்

இந்தோனேசியாவின் புதிய நிர்வாக தலைநகர் இந்தோனேசியாவின் புதிய நிர்வாக தலைநகர்  (ANSA)

போர்னியா தீவில் இந்தோனேசியாவின் புதிய நிர்வாக தலைநகர் திறப்பு

ஜாவா தீவில் இருந்த இந்தோனேசியாவின் தலைநகரானது போர்னியா தீவில் உள்ள நுசந்தாராவிற்கு மாற்றி வைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது ஆகஸ்ட் 17 சனிக்கிழமை நடைபெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மிகவும் தாழ்வான சமவெளியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஜகார்த்தா தீவானது மழை வெள்ள நேரங்களில் பெரும்பாலும் நிரம்பி வழிவதாலும், அதிகமான மக்கள் தொகையின் காரணமாக மாசுபட்ட நகரமாக இருப்பதாலும், அதன் தலைநகர் போர்னியா தீவில் உள்ள நுசந்தாராவிற்கு மாற்றப்படுகின்றது என்று கூறினார் புவியியல் நிபுணர் மானுவேல் ஃபிராங்க்.

ஆகஸ்ட் 17 சனிக்கிழமை அரசுத்தலைவர் ஜோகோ விடோடோ அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட புதிய நிர்வாகத் தலைநகர் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு கூறினார் இனால்கோ என்னும் தேசிய கிழக்கத்திய மொழி மற்றும் நாகரீகங்களுக்கான நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தெற்காசிய கிராம மற்றும் நகர்ப்புறப் பகுதிகளின் புவியியல் நிறுவனருமான மானுவேல் ஃபிராங்க்.   

அதிகப்படியான நகரமயமாக்கல், காற்று மாசுபாடு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, காடுகளின் நடுவில் சுற்றுச்சூழல் எழிலுடன், அறிவார்ந்த நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்படும் இத்தலை நகருக்கானத் திட்டமானது 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2045ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் 100 ஆவது ஆண்டு சுதந்திர தின நூற்றாண்டு விழாவிற்காகத் தயாராகி வருகின்றது.

மிகவும் மாசுபட்ட நகரமான ஜகார்த்தா மின்சாரத்திற்காக நிலக்கரியால் எரியூட்டப்படும் மின்உற்பத்தி நிலையங்களால் சூழப்பட்டுள்ளது என்றும், பொதுபோக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடையாதவாறு, நெரிசலான நகரமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் சிரமங்கள் கொண்டதாக இருக்கின்றது என்றும் கூறினார் ஃபிராங்க்.

ஆண்டுக்கு 20 சென்டிமீட்டர் வரை நிலத்தில் உள்ள மண் மூழ்குவது கவலைக்குரியது என்று தெரிவித்த ஃபிராங்க் அவர்கள், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நகரப்புறத்தின் சாலைகள், நீரோடைகளை கடலை நோக்கிக் கொண்டு செல்லும் சாக்கடை போல மாறுகிறது என்றும், இந்த ஓடைகள் நிரம்பி வழியும் போது அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்றும் கூறினார் ஃபிராங்க்.

போர்னியோ காடுகளின் மையத்தில் உள்ள நுசன்தாரா என்ற இடம் இந்தோனேசியாவிற்கு சொந்தமான போர்னியோவின் பகுதியான கலிமந்தனின் கிழக்கு பகுதிக்குச் சொந்தமானது என்றும், மற்றொரு பகுதி மலேசியா மற்றும் புருனே அரசுத்தூதரகத்தை உள்ளடக்கியது என்றும் கூறினார் ஃபிராங்க்.

இப்பகுதி இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, எண்ணெய், நிலக்கரி, கனிமங்கள், மரங்கள், காகித கூழ், யூக்கலிப்டஸ் ஆகியவற்றிற்கான தொழில்துறை தோட்டங்களின் தாயகமாக உள்ளது என்றும், இந்தோனேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டிற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட போர்னியோ பகுதியில், நிறைய இடமும் நிலமும் இருக்கிறது என்றும் கூறினார் ஃபிராங்க்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2024, 10:14