சமூகத்தில் நிலவும் தவறானப் புரிதல்கள் களையப்படவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கலவரமான சூழலைக் கண்டிக்கவேண்டும் என்றும் சமூகத்தில் நிலவும் தவறானப் புரிதல்கள் களையப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராசிரியர் அன்னா ரோலண்ட்ஸ்.
இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறையால் நாட்டின் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகி இருக்கின்றது என்றும் OSV என்னும் இங்கிலாந்து உள்ளூர் செய்திகளுக்கு பதிலளித்துள்ளார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்னா ரோலண்ட்ஸ்
இங்கிலாந்து மற்றும் வடக்குப்பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட வன்முறையானது சமூகக் கோபம், வெறுப்பு போன்றவற்றின் அடையாளம் என்றும், சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கின்றோம் என்று கூறும் வன்முறையில் சம்பத்தப்பட்டவர்கள் நம்பிக்கையின் பிணைப்பை பிரித்து சிதைத்துள்ளன என்றும் கூறியுள்ளார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்னா ரோலண்ட்ஸ்.
கோடைகாலத்தின் இனிமையை சுவைக்க இயலாது, இனம் மற்றும் மத அச்சுறுத்தலின் விளைவாக புதிய கவலையை அளிக்கும் இவ்வன்முறையானது யூத, ஆசிய, கறுப்பின, மற்றும் முஸ்லீம் சமூகங்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறியுள்ளார் பேராசிரியர் ரோலண்ட்ஸ்.
ஜூலை 29 திங்கள்கிழமை இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களில் கலவரச்சூழல் பரவியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிவரும் தவறான தகவல், இடம்பெயர்ந்தவர்கள் மீதான எதிர்ப்புஉணர்வு ஆகியவற்றால் இந்த வன்முறையானது அதிகரித்து வருகின்றது.
சவுத்போர்ட் நடனப்பள்ளியில் நடைபெற்ற இக்கொடுமையான நிகழ்வில் இரண்டு சிறுமிகள் கொல்லப்பட்டனர். 8 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்