தேடுதல்

உக்ரைன் சிறார் மையத்தில் குழந்தைகள்   உக்ரைன் சிறார் மையத்தில் குழந்தைகள்   (ANSA)

மக்கள் வாழும் பகுதிகளில் ஆயுதப் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும்

உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது ஆண்டின் முதல் பாதியில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. காயம்பட்ட மற்றும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது

மெரினா ராஜ் – வத்திக்கான்

பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைக் கடமைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்றும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வெடிபொருள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் போர் மற்றும் மோதலில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது சேவ் த சில் ரன் அமைப்பு.

ஆகஸ்ட் 10 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது ஆண்டின் முதல் பாதியில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், காயம்பட்ட மற்றும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2,200 ஆக உயர்ந்துள்ளது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது சேவ் த சில் ரன் என்னும் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு.

வரும் ஆகஸ்ட் 12 ஆம் நாளோடு உக்ரைனில் போர் தொடங்கி 900 நாட்களை கடக்கும் நிலையில் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகமானது (OHCHR) 2022 பிப்ரவரி மாதம் முதல், போர் மற்றும் மோதலினால் மொத்தம் 2,184 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், 633 பேர் இறந்துள்ளனர் 1,551 பேர் காயமடைந்துள்ளனர் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் உக்ரைன் நாட்டிற்கான சேவ் த சில்ரன் அமைப்பின் தேசிய துணை இயக்குநர் Stephane Moissaing.

2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் குழந்தை இறப்புகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன, 2023 ஆம் ஆண்டின் கடைசி ஏழு மாதங்களில் 243 பேர் இறந்த நிலையில் இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது 341 பேராக உயர்ந்துள்ளது வருத்தத்தை அளிப்பதாகவும் அவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளது

பொதுமக்கள் வாழ்கின்ற பகுதிகள் குறிப்பாக வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற குழந்தைகள் அதிகமாக இருக்கும் இடங்கள் அனைத்தும் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை உறுதிசெய்ய உணவு மற்றும் தண்ணீர், பணம், பாதுகாப்பான இடங்களை வழங்குவதற்காக பல்வேறு கூட்டமைப்புக்களுடன் இணைந்து நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் Stephane Moissaing.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2024, 11:15