தேடுதல்

உக்ரைன் சிறார் தங்களது அன்னையருடன்   உக்ரைன் சிறார் தங்களது அன்னையருடன்  

போர் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்

கடந்த 5 நாள்களில் மட்டும் 8 குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. குழந்தைகள் மற்றும் அவர்கள் சார்ந்த வாழ்விடங்கள் தாக்கப்படுவது கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் . - யுனிசெஃப்

மெரினா ராஜ் – வத்திக்கான்

போர் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், குழந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைப் பாதுகாப்பது மிக அவசியம், அவைகள் தாக்கப்பட வேண்டிய இலக்குகள் அல்ல என்றும் தனது "X" குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை வெளியிட்ட குறுஞ்செய்தியில் உக்ரைனின் கார்கீவ், கெர்சோன் பகுதியில் ஏற்பட்ட தாக்குதல்கள் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளது யுனிசெஃப் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு.

உக்ரைனில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் போரினால், கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 8 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும், பள்ளி வளாகங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் அக்குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பு.

கடந்த 5 நாள்களில் மட்டும் 8 குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் கருத்தத்திற்குரியது என்றும், குழந்தைகள் மற்றும் அவர்கள் சார்ந்த வாழ்விடங்கள் தாக்கப்படுவது கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திதுள்ளது யுனிசெஃப் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2024, 13:47