புர்கினா பாசோவில் புலம்பெயர்ந்த மக்கள் புர்கினா பாசோவில் புலம்பெயர்ந்த மக்கள்  (AFP or licensors)

புர்கினோ பாசோ எல்லைத் தாக்குதலில் 19 பேர் இறப்பு

உயிரிழந்த19 பேரில், 9 பேர் இராணுவ வீரர்கள், 10 பேர் பொதுமக்கள். காயமடைந்தவர்களில் ஏறக்குறைய 8 பேர் பொதுமக்கள், 4 பேர் இராணுவத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளது ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆப்ரிக்காவின் டோகோவிற்கும் புர்கினோ பாசோவிற்கும் இடையிலுள்ள நகரமான Fanworgou எனும் பகுதியில் அக்டோபர் மாதத் துவக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இரவு நேரத்தில் நடைபெற்ற இத்துயரமான நிகழ்வினால் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பணிப்பொருள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 செவ்வாய்க்கிழமை முதல் 2 புதன்கிழமை இரவு வரை நடைபெற்ற தாக்குதலினால் 19 பேர் உயிரிழந்தை எடுத்துரைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்.

புர்கினோ பாசோவில் இருக்கும் ஆயுதக் குழுக்களின் ஊடுருவலைத் தடுக்க ஒரு பாதுகாப்புத் தடையைக் கட்டும் பொறுப்பில், உள்ளூர் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும், அப்பணியையும் பணியாளர்களையும் காக்கும் எல்லை பணியில் ஈடுபட்டிருந்த டோகோ இராணுவ வீரர்களின் குழுவை, ஆயுதமேந்திய இராணுவப்படை தாக்கியது என்றும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட தடைகளை உடைத்தும், டோகோலிஸ் இராணுவத்தின் ரோந்துப் படைகளைத் தாக்கியும் பாதிப்பை ஏற்படுத்திய இப்படையானது, தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடிசைக்குள் புகுந்து அவர்களையும், அவர்கள் வேலைக்குப் பயன்படுத்தும் பொருள்களையும் அழித்தது என்றும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த19 பேரில், 9 பேர் இராணுவ வீரர்கள் என்றும், 10 பேர் பொதுமக்கள் என்றும், காயமடைந்தவர்களில் ஏறக்குறைய 8 பேர் பொதுமக்கள் மற்றும் 4 பேர் இராணுவத்தினர் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் புர்கினா பாசோவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அண்டை மாநிலத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய ஊடுருவல்களை சமாளிக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றும், டோகோ மற்றும் புர்கினா பாசோவின் எல்லைப் பகுதிகள் மற்றும் பெனினுடனான எல்லைப் பகுதிகள், சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜிஹாதிகள் மற்றும் கிரிமினல் குழுக்களின் இருப்பு தொடர்பான பதட்டங்களால் நீண்ட காலமாக நிறைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2024, 13:10