காசாவில் 4 பள்ளிகள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டன
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் உள்ள 4 பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறந்துள்ளனர் என்றும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 3 வியாழனன்று வெளியிடப்பட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் குழந்தைகள் அமைப்பு, போரினால் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர், எனவே போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகள் போர்த்தாக்குதல் செய்யப்படுவதற்கான இலக்கு அல்ல என்றும், குழந்தைகள் மீதான வன்முறையை ஏற்படுத்தும் இப்போர்ச் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் என்றும் அச்செய்தியில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வந்த தகவல்களின்படி மறுநாள் பள்ளிக்கள் திறக்கவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டதாகவும், இரவு வழிபாட்டிற்காக ஆலயத்தில் கூடியிருந்த போது வான்வழித் தாக்குதல்கள், அபாய ஒலிகள், எச்சரிக்கை ஒலிகள் என பல ஒலிகளை தாங்கள் கேட்டதாகவும் வத்திக்கான் செய்திகளுக்குக் கூறியுள்ளார் எருசலேம் அருள்பணியாளர் இப்ராஹிம் பால்தாஸ்.
இஸ்ரயேல் மீது ஈரான் மேற்கொண்ட இந்த தாக்குதல்களினால் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர் என்றும், எந்த நேரத்தில் எங்கிருந்து எப்படிப்பட்ட தாக்குதல்கள் வரும் என்று அஞ்சி, கலங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணி பால்தாஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்