உணவினைப் பெற்றுக்கொள்ளும் காசா சிறுமி உணவினைப் பெற்றுக்கொள்ளும் காசா சிறுமி  (AFP or licensors)

அவசரப் பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் காசா குழந்தைகள்

காசா முழுவதிலும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் தொடர்ச்சியான இடப்பெயர்வை எதிர்கொள்கின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் நடந்துவரும் மோதல்களினால் கடந்த 14 மாதங்களில், 14,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 11 இலட்ச குழந்தைகள் அவசரப் பாதுகாப்பு மற்றும் மனநலஉதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றன என்றும் யுனிசெஃப் அறிக்கையில் எடுத்துரைத்துள்ளார் யுனிசெஃப் பொது இயக்குனர் கத்தேரின் ருஸ்ஸெல்.

டிசம்பர் 14 சனிக்கிழமை காசாவில் துன்புறும் குழந்தைகள் மற்றும் மக்கள் நிலை பற்றிய அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃபின் பொதுஇயக்குநர் கத்தேரின் ருஸ்ஸெல் அவர்கள், வடக்கு காசா பகுதியில் பஞ்சம் தொடர்கிறது மற்றும் மனிதாபிமான அணுகல் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

காசா முழுவதிலும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் தொடர்ச்சியான இடப்பெயர்வை எதிர்கொள்கின்றனர் என்றும், இலட்சக்கணக்கான குழந்தைகள் 19 இலட்சம் மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், கூறியுள்ளார்.

வெப்பநிலை குறைவதால், உணவு, சுத்தமான தண்ணீர், மருத்துவப் பொருட்கள் மற்றும் குளிர்போக்கும் உடைகள் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் காஸாவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் இல்லை என்றும், ஹெபடைடிஸ் மற்றும் அம்மை போன்ற நோய்கள் வேகமாகப் பரவுவதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தோல்நோய் மற்றும் கடுமையான சுவாச நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

குளிர்காலம் குழந்தைகளின் துன்பத்தை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ருஸ்ஸேல் அவர்கள், பல குழந்தைகள் பசி, நோய், சளி போன்றவற்றுக்கு ஆளாகின்றனர் எனவே, மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், குழந்தைகளின் துன்பங்களுக்கு முடிவு காணவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தின் கீழ் அவர்களின் கடமைகளை கடைபிடிக்கவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க அழைப்புவிடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2024, 15:08