உறவினரின் கல்லறை அருகே இளையோர் உறவினரின் கல்லறை அருகே இளையோர்  (AFP or licensors)

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

15 மாதங்களுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து இன்றுவரை குறைந்தது 46,006 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,378 ஆக உயர்ந்துள்ளது : காசா நல அமைச்சகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 46,000ஐ கடந்துள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 மாதங்களுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை குறைந்தது 46,006 பேர் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,378 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டு நல அமைச்சகம் கூறியுள்ளது.

சிரியா

மற்ற இடங்களில், குர்திஷ் படைகளுக்கும் துருக்கிய ஆதரவுப் படைப்பிரிவுகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஏறத்தாழ 40 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு மன்பிஜ் பகுதியில் நடந்த மோதலில் ஜனவரி 9, இவ்வியாழனன்று, குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் துருக்கிய ஆதரவுப் படைப்பிரிவுகள் என்று கூறும் அவ்வமைப்பு, இந்த மோதலில் பொதுமக்கள் 5 பேர் மரணமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜனவரி 2025, 11:18