உக்ரைனில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 10 குழந்தைகள் காயம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனின் Zaporizhzhia-வில், ஜனவரி 8, புதன்கிழமை நேற்று இடம்பெற்ற கொடூர தாக்குதலில் பலியானவர்களில் 13 வயது குழந்தையும் அடங்கும் என்றும், 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் இடம்பெற்ற ஆயுதக் தாக்குதலால் காயமடைந்த 9 குழந்தைகளுடன் இது இணைகிறது என்றும், தனது எக்ஸ்தள பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
மேலும் இந்தப் பயங்கரம் குறித்து நாம் அலட்சியமாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், குழந்தைகளை எப்போதும் பாதுகாப்பது அவசியம் என்றும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டின், அக்டோபர் 31, நிலவரப்படி, உக்ரைன் மீதான இரஷ்யாவின் தாக்குதலின்போது மொத்தம் 39,081 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) உறுதிப்படுத்தியது. அவர்களில் 26,919 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அவ்வாணையம் தெரிவித்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்