தேடுதல்

உக்ரைனின் படைவீரர்கள் திருக்காட்சிப் பெருவிழாவில் பங்கேற்கின்றனர் உக்ரைனின் படைவீரர்கள் திருக்காட்சிப் பெருவிழாவில் பங்கேற்கின்றனர்   (ANSA)

உக்ரைன் போரில் 2,472 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்!

குழந்தைகள் போர்களைத் தொடங்குவதில்லை, ஆனால் அவர்கள்தாம் அதற்கு அதிகமாகப் பலியாகிறார்கள். குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் : யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் போர் தீவிரமடைந்ததில் இருந்து குறைந்தது 2,472 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 7, இச்செவ்வாயன்று, அதன் சுயவிபர குறிப்புப் பக்கத்தில் (profile X) இந்தத் தகவலை வழங்கியுள்ள யுனிசெப் நிறுவனம், இந்தப் போரின்போது குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களின் பள்ளிகள் குண்டுவீசித் தாக்கப்பட்டுள்ளன, வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன மற்றும் குடும்பங்கள் பிளவுபட்டுள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் புதிய வழக்கத்தை ஏற்க முடியாது என்றும், குழந்தைகள் போர்களைத் தொடங்குவதில்லை, ஆனால் அவர்கள்தாம் அதற்கு அதிகமாகப் பலியாகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ள அதேவேளை, குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2025, 12:51