காசாவில் 5,86,000 குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் 5,86,000 குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தனது எக்ஸ்த்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது காசாவிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 26, புதன்கிழமை இன்று, தனது எக்ஸ்த்தள பக்கத்தில் இந்தத் தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், 99 விழுக்காடு குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், நான்கே நாள்களில் அதன் இலக்கை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் காசாவில் அயராது உழைக்கும் அனைத்து யுனிசெஃப் குழுக்கள், பாலஸ்தீனிய நல அமைச்சகம், உலக நலவியல் நிறுவனம் (WHO), அண்மை கிழக்கில் உள்ள பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணி நிறுவனம் ஆகியவற்றிற்கு (UNRWA) இதுவொரு மிகப்பெரும் சாதனை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்