தேடுதல்

குழந்தைகளுடன் நடந்து செல்லும் தாய் குழந்தைகளுடன் நடந்து செல்லும் தாய்   (AFP or licensors)

2024-இல் மருத்துவ உதவிகளின்றி பிறக்கும் குழந்தைகள்!

2 கோடியே 40 இலட்சம் அன்னையர்கள் மருத்துவர், செவிலியர் இன்றியும், 2 கோடியே 80 இலட்சம் அன்னையர்கள் நல வசதிகள் இன்றியும் குழந்தைகளை பிரசவிப்பார்கள் : Women Dying, to Give Life அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2024 -ஆம் ஆண்டில் பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை மருத்துவச் சேவை இல்லாமல் உலகிற்கு வருகிறது என்றும், பிறக்காத குழந்தைகளையும் அவர்களின் அன்னையர்களையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

மே 3, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள ஆறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், பயனுள்ள மற்றும் நிலையான நிதியின் உதவிகொண்டு அடிப்படை உடல்நலம், கல்வி மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க நலப்பணிகள் வழியாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டுமெனவும் அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆண்டு பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை (17.9%) மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாமலேயே உலகிற்கு வரும் என்றும், பிறக்காத குழந்தைகள் மற்றும் அவர்களின் அன்னையர்களுக்குக் கடுமையான ஆபத்துகள் ஏற்படும் என்றும், மோதல் மற்றும் காலநிலை மாற்றம் அத்தியாவசிய தாய்வழி நலப்பணிகளை அணுக முடியாததாக ஆக்குகிறது என்றும் அதன் ஆய்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் சிறுமிகள் மற்றும் சிறுவர்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு எதிர்காலத்தை வழங்கவும் போராடி வரும் Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு எழுப்பிய எச்சரிக்கை மணி இதுவாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2024, 16:10