தேடுதல்

உக்ரைன் போர் பாதிப்பு உக்ரைன் போர் பாதிப்பு   (AFP or licensors)

உக்ரைனின் ஒடெசாவில் நடந்த தாக்குதலில் 3 பள்ளிகள் சேதம்!

குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகள் தாக்குதல்களின் இலக்காக அமையக்கூடாது. இந்தத் தாக்குதல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் : யுனிசெப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனின் ஒடெசாவில் நடந்த தாக்குதலில் மூன்று பள்ளிகள் சேதமடைந்ததாகத் தனது  எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.  

மே 2, இவ்வியாழன்று இத்தகவலை வழங்கியுள்ள யுனிசெப் நிறுவனம், இந்தத் தாக்குதல்கள், உக்ரைனில் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்ததாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளுடன் சேர்ந்து, இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கான அணுகலை சீர்குலைத்திருக்கிறது என்றும் பெரும் கவலை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகள் தாக்குதல்களின் இலக்காக அமையக்கூடாது என்றும், இந்தத் தாக்குதல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது அந்நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2024, 15:19