கர்தினால்  கிரேசியஸ் அவர்கள், மகராஷ்டிர கல்வி அமைச்சரை சந்திக்கும் நிகழ்வு கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மகராஷ்டிர கல்வி அமைச்சரை சந்திக்கும் நிகழ்வு 

பன்மை கலாச்சார, சமய சமுதாயத்தில் அமைதி பற்றிய கல்வி

இந்தியாவில், சிறுபான்மை மதத்தவரின் பள்ளிகள், அடிப்படைவாதிகளால் தாக்கப்படுவது அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளில், அமைதி பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

‘பல்வேறு மதங்கள் வாழ்கின்ற உலகில் அமைதி பற்றி கற்றுக்கொடுப்பது: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்’ என்ற தலைப்பில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும் இணைந்து வெளியிட்ட ஏட்டை, மகராஷ்டிர மாநில, இளையோர், விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சரிடம் வழங்கியுள்ளார், மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

அமைதி பற்றிய கல்வியில், தன்னைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, மற்றவருக்குத் திறந்தமனதுடன் இருத்தல், ஊடகங்களைக் கவனமுடன் பயன்படுத்தல், தனிப்பட்ட ஆன்மீகத்தை ஊக்குவித்தல் போன்றவை வழங்கப்பட வேண்டும் என, அந்த ஏடு வலியுறுத்துகிறது.

இந்த ஏடு பற்றியும், Edu Focus என்ற இதழ் பற்றியும் ஆசியச் செய்தியிடம் பகிரந்துகொண்ட, மும்பை புனித ஆன்ட்ரூ கல்லூரி தலைவர் அருள்பணி Magi Murzello அவர்கள், பன்மை கலாச்சாரம் மற்றும் மதங்கள் கொண்ட சூழலில் வாழ்கின்ற நமக்கு, அமைதியைக் கட்டியெழுப்புவதில், கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினார்.

இந்தியாவில், கிறிஸ்தவ மற்றும், ஏனைய சிறுபான்மை மதத்தவரின் பள்ளிகள், அடிப்படைவாதிகளால் தாக்கப்படுவது அதிகரித்துவரும் நிலையில், அமைதி பற்றி, பள்ளிகளில் அதிகம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது என்றும், Murzello அவர்கள் கூறினார்.  

இதனாலே, Edu Focus இதழின் ஜூலை மாத வெளியீடு, திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும் இணைந்து வெளியிட்ட ஏட்டிற்கு அர்ப்பணிக்கப்ப்ட்ள்ளது என்றும், Murzello அவர்கள் கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2019, 15:38